Headlines
Loading...
11,000 கோடி நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் , 5 கோடி ரூபா செலவில் CCTV கேமராக்கள் பொருத்தப் பட்டன.

11,000 கோடி நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் , 5 கோடி ரூபா செலவில் CCTV கேமராக்கள் பொருத்தப் பட்டன.







கடுமையான நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ள இலங்கை பெற்றோலிய

கூட்டுத்தாபனம் 50 மில்லியன் ரூபா செலவில் பாதுகாப்பு கமராக்களை பொருத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




பெற்றோலிய கூட்டுத்தாபனம் அமைந்துள்ள கட்டிடத்தில் ஏற்கனவே பொருத்தப்பட்ட பாதுகாப்பு கேமராக்கள் செயல்பாட்டில் இருக்கும் நிலையில் இந்த புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.அ




இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கடும் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சந்தித்து வரும் அதே வேளையில், 11,000 கோடி ரூபா நஷ்டத்தையும் கொண்டுள்ளது.




இந்நிலையில் 5 கோடி செலவில் பாதுகாப்பு கமராக்களை பொருத்தியிருப்பது வியப்பளிக்கிறது என ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.







பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அமைந்துள்ள தெமட்டகொடையில் ஐந்து மாடிக் கட்டிடம் முழுவதும் பாதுகாப்பு கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகளின் அறைகளில் உயர்தர பாதுகாப்பு கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


0 Comments: