பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அடிப்படை தரவுகளை சேகரிக்கவும், அவர்களின் கல்வித்தகைமைகள் உள்ளடங்கலாக அவர்களின் தனிப்பட்ட கோப்புகளை பராமரிக்கவும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கல்வித்தகைமைகள் குறித்து பாராளுமன்ற அலுவலகம் கோரிக்கை விடுத்திருந்த போதிலும் 20 வீதமான பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித்தகைமை வழங்கப்படாது மறுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற அலுவலகம் தெரிவித்துள்ளது.
சுமார் ஒரு வருடத்திற்கு அதிக காலமாக இவ்வாறு பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித்தகைமைகள், அவர்களின் அடிப்படை தகவல்கள், அவர்களை தொடர்புகொள்ளும் இலக்கங்கள், முகவரிகள் என்பவற்றை ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரிடமும் கோரியிருந்த போதிலும் 80 வீதமான பாராளுமன்ற உறுப்பினர் தமது கல்வித்தகைமைகள் மற்றும் ஏனைய அடிப்படை காரணிகளை பாராளுமன்ற அலுவலகத்திற்கு வழங்கியுள்ளதாகவும், எனினும் 20 வீதமான பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்னமும் அவற்றை வழங்காதுள்ளதாகவும், சிலரிடம் வினவினாலும் அவர்கள் பல்வேறு காரணிகளை கூறி தகவல் வழங்குவதில் இருந்து நழுவிச்செல்வதாகவும் பாராளுமன்ற அலுவலக அதிகாரிகள் நகைச்சுவையாக தெரிவித்திருந்தனர்.
எவ்வாறு இருப்பினும் இலங்கை பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் மக்களின் பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் அடிப்படை தகுதி இருக்க வேண்டும் எனவும், அதேபோல் அவர்கள் வழங்கும் தகவல்களில் உண்மைத்தன்மை இருக்க வேண்டும் என கருதுவதாகவும், இவ்வாறு தகவல் வழங்க மறுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற அலுவலகம் கேட்டுள்ள தகவல்களை பெற்றுக்கொடுக்க சபாநாயகரை வலியுறுத்தவுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Post a Comment