Headlines
Loading...
நாளை மின் துண்டிப்பு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு

நாளை மின் துண்டிப்பு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு


நாளைய தினமும் நாட்டின் சில வலயங்களுக்கு ஏழரை மணிநேரம் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.


காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரையான காலப்பகுதியில் 2 கட்டங்களாக இந்த துண்டிப்பு அமுலாக்கப்படும் என அந்த சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.


இதன்படி, E மற்றும் F ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 5 மணித்தியாலங்களுக்கும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரை இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மின் துண்டிக்கப்படவுள்ளது.


P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு காலை 8 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்களுக்கும், மாலை 5 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலத்துக்கும் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் என மின்சார சபை தெரிவித்துள்ளது.

0 Comments: