அமைச்சரவையில் திடீர் மாற்றம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அமைச்சரவையில் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வகையில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்கவுக்கு புதிய அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது.
மேலும், பவித்ரா வன்னியாராச்சி, தினேஷ் குணவர்தன மற்றும் காமினி லொகுகே ஆகியோருக்கு புதிய அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, பவித்ரா வன்னியாராச்சி தற்போது போக்குவரத்து அமைச்சராக பதவி வகிக்கின்றார்.
தினேஷ் குணவர்தன கல்வி அமைச்சராக உள்ளார்.
மற்றும் காமினி லொகுகே மின்சக்தி அமைச்சராக உள்ளமை குறிப்பிடத்தக்கது. (R)
0 Comments: