Headlines
Loading...
 ‘வெட கரன அபே விருவா’ பாடலை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை ?

‘வெட கரன அபே விருவா’ பாடலை தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை ?


‘வெட கரன அபே விருவா’ எனும் பாடலைத் தவறாக பயன்படுத்துவோருக்கு எதிராக, பொலிஸார்


நடவடிக்கை எடுக்கப்போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகின. அந்தச் செய்தியை பொலிஸார் முழுமையாக மறுத்துள்ளனர்.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்காக இப்பாடல் பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டிருந்தது.


எனினும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் மத்தியில் இளைஞர்கள் சிலர் இப்பாடலை ஒலிபரப்பி வருகின்றனர்.


இவ்வாறான நிலையில் ‘வெட கரன அபே விருவா’ பாடலை தவறாகப் பயன்படுத்த வோருக்கு எதிராக சி.ஐ.டியினர் நடவடிக்கை எடுத்து வருவதாக சமூகவலைத்தளங்களில் பதியப்பட்டன. ஜனாதிபதியை அவமதிக்கும் வகையில் வெட கரன அபே விருவா பாடலை ஒலிபரப்புவோருக்கு எதிராக


நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சமூகவலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகள் பொய் எனவும் பொலிஸார் விளக்கமளித்துள்ளனர்.


0 Comments: