பல பகுதிகளில் போக்குவரத்து சேவைகள் பாதிப்பு!


நாட்டின் பல பகுதிகளிலும் இன்று (20) பொதுப் போக்குவரத்து சேவைகள் இடம்பெறவில்லை என எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

 

நேற்றைய தினம் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. எரிபொருள் விலையுயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல நகரங்களிலும் தனியார் பஸ் உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தனர்.