🔴வாகனங்களின் விலையில் மீண்டும் மாற்றம்
நாட்டில் கார்களின் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக வாகன விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.


எரிபொருள் விலை வீழ்ச்சியும் டொலரின் பெறுமதி வீழ்ச்சியும் இதற்குக் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


எவ்வாறாயினும், வாகன உதிரி பாகங்களின் விலை, வாகன பராமரிப்பு (சேவை) கட்டணம், காப்புறுதி கட்டணம் மற்றும் குத்தகைக் கட்டணம் ஆகியவற்றில் இருந்து மக்களுக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை என வாகன விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.


விமானக் கட்டணங்கள் குறைவினால் எதிர்காலத்தில் வாகன விற்பனையில் அதிகரிப்பைக் காண முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.