🔴மூன்று பிரதேசங்களில் பலத்த பாதுகாப்பு


அம்பலாங்கொடை, அஹுங்கல்ல, மீட்டியகொடை பொலிஸ் பிரிவுகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதற்காக பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடற்படை மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


தொடர் கொலைகள் மற்றும் ஏனைய குற்றச் செயல்கள் காரணமாக இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இதன்படி, புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது, ​​ஊரகஸ்மங்ஹந்திய - போகஹவெல பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடொன்றில் இருந்து பல இராணுவ சீருடைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.


இந்த வீட்டில் தற்காலிகமாக தங்கியிருந்தவர், இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற இராணுவ சிப்பாய் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


சந்தேக நபரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன்,  இராணுவ சீருடைகள் ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.