அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு


புதிய ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கும் வகையில் எதிர்வரும் 29 ஆம் திகதி விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷ அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தற்போதைய பிரதமர் மற்றும் அமைச்சரவையின் பதவி விலகலைத் தொடர்ந்து புதிய அரசாங்கததை அமைப்பது மற்றும் புதிய சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கு கொள்கையளவில் இணக்கம் தெரிவிப்பதாக ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷ நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Tags