வரி அதிகரிப்பதைத் தவிர வேறு வழி இல்லை – நிதியமைச்சர்


இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளமையினால் நாட்டின் விற்பனை வரியை அதிகரிப்பதைத் தவிர வேறு வழி இல்லை என நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.


பி.பி.சி ஊடகத்துக்கு வழங்கிய செவ்வியிலேயே நிதியமைச்சர் அலி சப்ரி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த 2019 ஆம் ஆண்டில் பெறுமதி சேர் வரியை 8 வீதமாகக் குறைத்தமை அரசாங்கம் மேற்கொண்ட முக்கிய தவறாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இதற்கமைய பெறுமதி சேர் வரியை 13 அல்லது 14 வீதமாக அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.


மேலும், கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு வரிகளை அதிகரிப்பதற்கான கடினமான தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


அத்துடன், அரசாங்கத்தின் வருமானத்திற்கும் செலவுக்கும் இடையிலான வித்தியாசத்தை குறைப்பதற்கு அவசியமான வழிமுறையைக் கண்டறிய வேண்டும் எனவும் நிதியமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.


மேலும், எதிர்வரும் 8 மாதங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags