மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ள விடயம் தொடர்பில் அவதானம்


நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு தீர்வுகாணுமாறு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் வலயுறுத்தியுள்ள நிலையில் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.


ஜனாதிபதியுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

 

இதேவேளை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரினால் மகாநாயக்க தேரர்களுக்கு கடிதம் ஒன்று அனுப்பபட்டுள்ளது.


அனைத்துகட்சி இடைக்கால ஆட்சியொன்றை உருவாக்க ஒத்துழைப்பு வழங்கும் குழு என தம்மை அடையாளப்படுத்தும் பொதுஜன பெரமுனவின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களாலேயே இந்த கடிதம் அனுப்பட்டுள்ளது.

Tags