நாளை புகையிரத சேவைகளும் ஸ்தம்பிதம்இன்று (27) நள்ளிரவு முதல் அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


அதன்படி, ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம், உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிற்சங்கங்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 

அரசாங்கத்திற்கு எதிராக தீவிரமடைந்துள்ள போராட்டத்தை பலப்படுத்தும் வகையிலும், ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பற்கு அழுத்தம் பிரயோகிக்கும் வகையிலும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Tags