போராட்டங்களில் ஈடுபட்டு வரும் பொதுமக்களுக்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) ஆதரவு தெரிவித்தது.


நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமைக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டங்களில்

ஈடுபட்டு வரும் பொதுமக்களுக்கு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) ஆதரவு  தெரிவித்துள்ளது.


அறிக்கையொன்றை வெளியிட்ட GMOA, பொது மக்கள் மற்றும் மதத் தலைவர்களின் கோரிக்கைக்கு இணங்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.


மக்கள் இயக்கத்திற்கு ஆதரவாக நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு GMOAவின் பொதுக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.