17ஆம் திகதி நள்ளிரவு முதல் கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகளுக்கு தடை


க.பொ.த சாதாரண தர பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள், மேலதிக வகுப்புகள் மற்றும் கலந்துரையாடல்களுக்கு எதிர்வரும் 17ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.


கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சை, எதிர்வரும் 23 ஆம் திகதி முதல், ஜூன் மாதம் முதலாம் திகதிவரை நடைபெறவுள்ள நிலையிலேயே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.