செயலிழந்துள்ள நுரைச்சோலை அனல் மின் நிலையம் எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் இயங்கும் ?


செயலிழந்துள்ள நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் முதல் இயந்திரத் தொகுதி எதிர்வரும் 21ஆம் திகதி மீண்டும் செயற்படக் கூடியதாக இருக்குமென்று இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.


தற்போது நாளாந்த மின்சாரத் தேவையில் 30 வீதத்திற்கு மேற்பட்டவை நீர் மின்னுற்பத்தி மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றது.


தற்போது பெய்து வரும் கடும் மழைகாரணமாக நீரேந்து பகுதிகளின் நீர்மட்டம் 50 வீதத்தினால் அதிகரித்துள்ளது.


எரிபொருள் இல்லாததன் காரணமாக எரிபொருள் மூலமான மின்னுற்பத்தி அனைத்தும் தற்போது தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.