மோதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 249 ஆக உயர்வு

 


நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் 249 பேர் காயமடைந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்தது.


மோதல்களில் காயமடைந்த 232 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.


இவர்களில் ஐவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


போராட்டக்களத்தில் ஏற்பட்ட அமைதியின்மை மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இடம்பெற்ற பல்வேறு மோதல்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.