மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளம் தம்பதி உட்பட மூவர் உயிரிழப்பு.


பொலன்னறுவை – மட்டக்களப்பு பிரதான வீதியின் மன்னம்பிட்டிய பகுதியில் பஸ் வண்டியுடன் முச்சக்கரவண்டி மோதி விபத்திற்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


இவர்களில் திருமணமான இளம் தம்பதியரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.


உயிரிழந்தவர்களின் மேலதிக அடையாளங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை