சமூக ஊடக செயற்பாட்டாளரான ரெட்டா கைது

சமூக ஊடக செயற்பாட்டாளரான ரெட்டா எனப்படும் ரத்திந்து சேனாரத்னவை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


கோட்டை நீதிமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாருக்கும் நீதித்துறைக்கும் இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.