கோட்டாகோகமவில் நாளை பேரணி! கறுப்பு ஆடை அணிந்து வருமாறு அழைப்பு!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்டுவரும் “கோட்டா கோகம” போராட்டத்துக்கு 50 நாட்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாளை 28 ஆம் திகதி எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெறவுள்ளது.


யாழ்ப்பாணத்தில் இருந்தும் நாளைய தினம் காலிமுகத்திடல் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக இளைஞர்கள் வரவுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.


நாளை பிற்பகல் 2 மணிக்கு கொள்ளுப்பிட்டி சந்தியில் இருந்து, ஜனாதிபதி செயலகம் வரை கறுப்பு உடை அணிந்து எதிர்ப்புப் பேரணியொன்றயும் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அதன் பின்னர் போராட்டக் களத்தில் பல்வேறு எதிர்ப்பு செயற்பாடுகளில் ஈடுபடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இதற்கும் மேலதிகமாக அன்றைய தினம் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு நாடு முழுவதும் உள்ள பொதுமக்களிடமும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.