ஹஜ் பயண ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்காது“இவ்­வ­ருட ஹஜ் பயண ஏற்­பா­டு­களை அர­சாங்கம் முன்­னின்று மேற்­கொள்­ள­வுள்­ள­தாக வதந்­திகள் பரப்­பப்­பட்­டுள்­ள­தா­கவும், அவ்­வா­றான தீர்­மானம் எதுவும் அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­படவில்லை எனவும் அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் தெரி­வித்தார்.


இதனை முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் இப்­ராஹிம் அன்­ஸாரும் உறு­திப்­ப­டுத்­தினார்.


இவ்­வ­ருடம் ஹஜ் முகவர் தெரி­வு­களை ஹஜ் யாத்­தி­ரி­கர்­களே மேற்­கொள்ள முடியும். அரச ஹஜ் குழு இவ்­வ­ருடம் அனு­ம­திப்­பத்­திரம் வழங்­கப்­பட்­டுள்ள முக­வர்­களின் பட்­டி­யலை யாத்­தி­ரி­கர்­களின் பார்­வைக்­காக வெளி­யிடும் எனவும் அரச ஹஜ் குழுவின் தலைவர் அஹ்கம் உவைஸ் தெரி­வித்தார்.


மேலும் அவர் தெரி­விக்­கையில், முகவர் ஒரு­வ­ருக்கு ஆகக்­கு­றைந்­தது 25 கோட்­டாவும் ஆகக் கூடி­ய­தாக 100 கோட்­டாவும் வழங்­கு­வது பற்றி ஆலோ­சிக்­கப்­பட்டு வரு­கி­றது.


ஹஜ் யாத்­தி­ரி­கர்­களின் நலன்களைப் பேணும் வகையில் ஹஜ் முகவர்களுக்கு நிபந்தனைகள் விதிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.


Vidivelli