நாடளாவிய ரீதியில் நாளை விசேட சுற்றிவளைப்பு


நாடளாவிய ரீதியில் நாளை (21) விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.


சட்டவிரோதமான முறையில் எரிபொருளை சேமித்து வைப்பவர்கள் மற்றும் மீள் விற்பனை செய்பவர்கள் தொடர்பில் கண்டறியும் நோக்கில் இந்த சோதனைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

 

அதன்படி நாளை முதல் அவ்வாறானவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.