ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளராக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

 




இவரை தொடர்ந்து, சபை முதல்வராக தினேஷ் குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.


அதேவேளை , புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டதன் பின்னரான முதலாவது பாராளுமன்ற அமர்வு நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.


இதன்போது ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து விலகியமை அடுத்து ஏற்பட்டுள்ள வெற்றிடத்துக்கான தெரிவு அன்றைய தினம் இடம்பெறவுள்ளது.


அதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தி குறித்த பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்னவின் பெயரை முன்வைக்கவுள்ளதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தமது ட்விடடர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் பிரதி சபாநாயகர் பதவிக்காக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஷவின் பெயரை முன்வைக்கவுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.