வாகனங்களின் எரிபொருள் தாங்கிக்கு மட்டுமே பெற்றோல் விநியோகிக்கப்படும் – லங்கா ஐஓசி


லங்கா ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள வாகனங்களின் எரிபொருள் தாங்கிக்கு மட்டுமே நேரடியாக பெற்றோல் விநியோகிக்கப்படும் என லங்கா ஐஓசி இன்று (20) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


தமது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து கலன்கள், பீப்பாய்கள் அல்லது போத்தல்களில் பெற்றோல் வழங்கப்படாது என லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.


பொதுமக்கள் மற்றும் சொத்துக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா ஐஓசி தெரிவித்துள்ளது.