அதிபர் கண்டித்ததால் பாடசாலைக்கு தீ வைத்த இரண்டு மாணவர்கள் கைது, பாணந்துறையில் சம்பவம்!

 


பாணந்துறையில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபரின் அலுவலகம் மற்றும் கணினி அறைக்கு நேற்று தீ வைத்த குற்றச்சாட்டில் இரண்டு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


12 மற்றும் 07 வயதுடைய பாடசாலையைச் சேர்ந்த இரு மாணவர்களே இரண்டு அறைகளுக்கும் தீ வைத்துள்ளதாக சிசிடிவி காட்சிகளில் தெரியவந்துள்ளது.


சில தவறுகளுக்காக அதிபரால் தண்டிக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில் மாணவர்கள் இவ்வாறு செயற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


பாடசாலையின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.


சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு மாணவர்களும் இன்று பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.