இந்த ஆண்டு இலங்கையில் இருந்து ஹஜ் யாத்திரைக்கு யாத்ரீகர்கள் செல்வதில்லை என தீர்மானிக்கப் பட்டது.

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு யாத்ரீகர்களை அனுப்புவதில்லை 

என இலங்கை தீர்மானித்துள்ளது.

 நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பின்னர் இலங்கை மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அந்நிய கையிருப்பு பற்றாக்குறையால் எரிபொருள், சமையல் எரிவாயு மற்றும் இதர அத்தியாவசியப் பொருட்களுக்கான நீண்ட வரிசையில் காத்து நிற்கும் அதே வேளையில் மின்வெட்டு மற்றும் உணவுப் பொருட்களின் விலையேற்றம் ஆகியவை மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளன. பொருளாதார நெருக்கடி இலங்கையிலும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது