அட்டுலுகம சிறுமியின் மரண பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது


கொலை செய்யப்பட்ட பண்டாரகம – அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆய்ஷாவின் மரண பரிசோதனைகள் பண்டாரகம ஆதார வைத்தியசாலையில் இன்று இடம்பெறவுள்ளது.


அத்துடன் சிறுமியின் கொலை தொடர்பில் பல தரப்பினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


குற்றப்புலனாய்வு திணைக்களம் மற்றும் 5பொலிஸ் குழுக்கள் என்பன விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதற்கமைய குறித்த பகுதியில் உள்ள சி.சி.ரி.வி காணொளி காட்சிகள் பரிசோதிக்கப்படுவதோடு போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்கள் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


அத்துடன் தொலைபேசி அலைவரிசைகளும் பரிசோதிக்கப்படுவதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

 

கடந்த 27ஆம் திகதி காணாமல் போயிருந்த சிறுமி பாத்திமா ஆய்ஷா அக்ரம், மறுநாள் தமது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றில் வைத்து சடலமாக மீட்கப்பட்டார்.


சம்பவம் தொடர்பில் தற்போது குடும்ப உறுப்பினர்கள் உட்பட 30 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.