புதிய பிரதமராக ரணில்; மாலை பதவியேற்புஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.30 மணிக்கு பிரதமராக பதவியேற்கவுள்ளதாக அவரது கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.நேற்று மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் இரகசிய கலந்துரையாடல்களை நடத்திய விக்ரமசிங்க, திங்கட்கிழமை மஹிந்த ராஜபக்ஷவின் இராஜினாமாவை அடுத்து புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளார்.பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர், கொழும்பில் உள்ள விகாரைக்கு விக்கிரமசிங்க சென்று தனது கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.