எரிபொருள் நிலைய உரிமையாளர் ஒருவரின் வீட்டிற்கு தீ...


கெக்கிராவ – இப்பலோகம – திலக்கபுர பகுதியில் உள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர் ஒருவரின் வீட்டிற்கு சிலரால் தீ வைக்கப்பட்டுள்ளது.


அதன்படி ,இப்பலோகம பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான எரிபொருள் நிலையத்தில், எரிபொருள் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் குறித்த வீட்டிற்கு தீ வைத்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகித்துள்ளனர்.


தீ வைக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் எரிபொருள் நிலைய உரிமையாளரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் வீட்டினுள் இருந்துள்ளனர்.


இருப்பினும் , பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் இணைந்து அவர்களை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.


குறித்த பிள்ளைகளில் ஒருவர், நாளை ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ளதுடன், அவரின் பாடசாலை உபகரணங்கள் தீயில் எரிந்துள்ளதாகவும், வீட்டிற்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.