மின் கட்டணம் உயர்வு? 06 ஆம் திகதி இறுதி முடிவு!!


மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை எதிர்வரும் திங்கட்கிழமை (06) அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.


மின்சார சபைக்கு ஏற்படும் பாரியளவு நட்டத்தை குறைத்துக்கொள்வதற்காக மின் கட்டணங்களை அதிகரிப்பதற்கான யோசனை தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் M.M.C.பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


இலங்கை மின்சார சபையின் வருடாந்த வருமானம் 276 பில்லியன் ரூபாவாகும். எனினும், அதன் செலவு 750 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் கூறியுள்ளார்.