3000 பேக்கரிகள் மூடப்பட்டுவிட்டன: பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு


 பேக்கரி உற்பத்திகளுக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் விலை 300% இற்கும் மேலாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


கடந்த வாரத்தில் 50 கிலோகிராம் கோதுமை மா பொதி ஒன்றின் விலை 1000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாகவும், தற்போது ஒரு கோதுமை மா பொதி 14,000 ரூபாவிற்கு விற்கப்படுவதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் N.K. ஜயவர்தன தெரிவித்தார்.


நாட்டில் இதுவரை கிட்டத்தட்ட 3,000 பேக்கரிகள் மூடப்பட்டுவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.


டீசல் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாட்டிற்கு உடனடி தீர்வுகளை வழங்குமாறு அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிடம் கோரிக்கை விடுப்பதாகவும் N.K. ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.