சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலை பிரகடனம்


சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார ஸ்தாபனம் பிரகடனப்படுத்தியுள்ளது.


குரங்கம்மை வைரஸ் பரவலையடுத்து இவ்வாறு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.


உலகம் முழுவதும் குரங்கம்மை தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது.


பிரித்தானியா 800இற்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், பிரித்தானியாவில் தொற்று பரவும் வேகம் 5 நாட்களில் 40 வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் சுகாதார தரப்பினர் கூறியுள்ளனர்.


இதேவேளை ஸ்பெயின், ஜெர்மனி மற்றும் போர்த்துக்கல்லிலும் அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.


அமெரிக்காவில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், சிங்கப்பூரிலும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இந்நிலையில் ஒன்றுகூடிய உலக சுகாதார ஸ்தாபனம் அசாதாரணமான வகையில் தொற்று பரவுவது கவலைக்குரிய விடயம் என தெரிவித்துள்ளது.