இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் தனியார் பஸ்களுக்கு எரிபொருள் வழங்கவில்லை -சரத் விஜித


இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போக்கள் ஊடாக தனியார் பஸ்களுக்கு எரிபொருள் வழங்கப்படுவதில்லை என மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இலங்கை போக்குவரத்து சபை பஸ்களுக்கு மாத்திரமே முன்னுரிமை வழங்கப்படுவதாக சங்கத்தின் தலைவரான சரத் விஜித தெரிவித்தார்.


இலங்கை போக்குவரத்து சபை டிப்போக்கள் ஊடாக எரிபொருளை வழங்குவதற்கு அனைத்து தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடியதை அடுத்து தீர்மானம் எட்டப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


எவ்வாறாயினும், தனியார் பஸ்களுக்கு முன்னுரிமை வழங்கப்படாத நிலையில் தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


இவ்வாறான நடவடிக்கைகள் தொடரும் பட்சத்தில் தனியார் பஸ்கள் இலங்கை போக்குவரத்து சபை டிப்போவிற்கு வெளியே நிறுத்தப்படும்.


எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அரசாங்கம் எரிபொருளை வழங்குமாறு கோரிய அவர், அதற்கேற்ப தனியார் பஸ் நடத்துனர்கள் தமது எரிபொருள் தேவையை பூர்த்தி செய்து கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.