வீடு திரும்பினார் வவுனியாவில் காணாமல் போன இளைஞன் நடந்தது இதுதான்..!!!வவுனியா குருமன்காட்டில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார்.

கயேந்திரன் கிருத்திகன் என்ற இளைஞரே கடந்த சில தினங்களாக காணாமல் போய்விட்டதாக அவரது உறவினர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டினை மேற்கொண்டிருந்தனர்.

வீட்டில் ஏற்பட்ட முரண்பாட்டினால் யாழ்ப்பாணத்திலுள்ள நண்பர் ஒருவரின் வீட்டிற்கு சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இளைஞர் வீட்டில் ஒருவரிடமும் சொல்லாமல் சென்றுவிட்டதாகவும் தற்போது காணாமல் போய்விட்டதாக செய்திகள் பரவியதை அடுத்து மீண்டும் திரும்பி வந்துவிட்டார் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இளைஞனை இன்று காலை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டினை மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்