இப்போதைக்கு எனக்கு எம்.பி பதவியோ, அமைச்சர் பதவியோ வேண்டாம்.. தம்மிக்க பெரேரா அறிவிப்பு.





தனது நியமனத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள

அடிப்படை உரிமை மீறல் மனுக்களை தொடர அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்கும் வரை தாம் எம்.பியாகவோ அமைச்சராகவோ பதவிப் பிரமாணம் செய்யப் போவதில்லை என பிரபல தொழிலதிபர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் தம்மிக்க பெரேராவின் சட்டத்தரணி இன்று உயர் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக தம்மிக்க பெரேராவை நியமிப்பதற்கான வர்த்தமானி ஜூன் 10ஆம் திகதி வெளியிடப்பட்டது.


இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தம்மிக்க பெரேராவின் நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் தம்மிக்க பெரேராவின் நாடாளுமன்ற உறுப்பினர் நியமனம் இலங்கையின் அரசியலமைப்பை மீறும் செயலாகும் என்று கூறி இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.