எரிவாயு விநியோகம் தொடர்பில் பிரதமர் விசேட அறிவிப்பு



தற்போதைய சூழ்நிலையில் மொத்தமாக கொள்வனவு செய்பவர்களுக்கு மாத்திரமே எரிவாயு விநியோகம் செய்ய முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 


அதன்படி, வைத்தியசாலைகள், உணவகங்கள் மற்றும் தகனக் கூடங்கள் இந்தக் குழுக்களின் கீழ் வரும் என பிரதமர் தெரிவித்துள்ளார். 


3,600 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றி வந்த கப்பலுக்கு நேற்று பணம் செலுத்தப்பட்டதன் பின்னர் இன்று (14) எரிவாயு மிதவைகள் ஊடாக முத்துராஜவெல லிட்ரோ முனையத்திற்கு கொண்டு செல்லும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 


2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிலுவைத் தொகையை செலுத்தாத காரணத்தால் கப்பல் தல்தியவத்தை கடற்பரப்பில் ஆறு நாட்களாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது. 


இதன்பின் வரும் கப்பல்களில் இருந்து 4 மாதங்களுக்கு தேவையான எரிவாயுவை பெறும் திட்டம் உள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.