அட்டுளுகம ஆயிஷாவின் வீட்டுக்குச் சென்று நிதியுதவி வழங்கிய சஜித் பிரேமதாஸ


அட்டுளுகம பிரதேசத்தில் அண்மையில் கடத்தி கொலை செய்யப்பட்ட ஒன்பது வயதான பாத்திமா ஆயிஷாவின் வீட்டுக்குச் இன்று (04) சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அச்சிறுமியின் குடும்பத்தினர் அனைவரிடமும் தனது துயரத்தையும் பகிர்ந்துகொண்டார்.


இந்த உணர்ச்சிகரமான தருணத்தில் எதிர்காலத்திற்கு குறிப்பிட்டளவு பக்கபலமாக இருக்கும் பொருட்டு, மறைந்த சிறுமி பாத்திமா ஆசியாவின் தாயாரான அமீர் மும்தாஸ் பேகத்திற்கு நிநியுதவிகளை வழங்கி வைத்த எதிர்க்கட்சித் தலைவர், எதிர்காலத்திலும் குடும்பத்திற்கு பக்கபலமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.


இதனைத் தொடர்ந்து அட்டுளுகம பெரிய பள்ளிவாசலுக்கு விஜயம் செய்த எதிர்க்கட்சித் தலைவர் மக்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.