நுளம்பு பெருக்கம் அதிகரிப்பு ,ஆபத்தில் கொழும்பு
டெங்கு தொற்று மற்றும் நுளம்பு பெருக்கம் அதிகரித்து வருவதால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தங்கள் வீட்டுத் தோட்டம் மற்றும் சுற்றுச்சூழலை சுத்தம் செய்ய பயன்படுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மருத்துவர் பிரசாத் கொலபாகே இதனைத் தெரிவித்தார்.

கடந்த வருடங்களுடன் ஒப்பிடும் போது, ​​இந்த வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2020 ஆம் ஆண்டில், 31,000 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர் , ஆனால் கடந்த ஆறு மாதங்களில், 25,000 இற்கும் மேற்பட்டோர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேல் மாகாணத்திலேயே அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இது மொத்த தொகையில் 40% சதவீதமாகும். “கொழும்பு மாவட்டம் அதிக ஆபத்தில் உள்ளது என்பது இரகசியமல்ல” என்றும் மருத்துவர் கொலபாகே கூறியுள்ளார் .