ஹர்ஷ டி சில்வாவின் கூற்றுக்கு மொஹமட் நஷீட் மறுப்பு : நான் அப்படி எதுவும் கூறவில்லை


பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவின் குற்றச்சாட்டை மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட் மறுத்துள்ளார்.


பல நாடுகள் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாகவும் அதற்கான உதவிகள் கிடைக்கும் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


நேற்று முன்தினம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தானும் மாலைதீவு முன்னாள் ஜனாதிபதியும் கருத்துகளை பரிமாறிக் கொண்டதாகவும் இதன்போது இலங்கைக்கு உரிய திட்டங்கள் இல்லாததால் உலக நாடுகள் உதவிக்கு வர தயங்குவதாக மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதி தெரிவித்ததாகவும் ஹர்ஷ எம்பி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.