எரிபொருள் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழப்பு

 

அங்குருவாதொட்ட-பட்டகொடவில் உள்ள எரிபொருள் நிலையத்தில் வரிசையில் காத்திருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.


63 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.