எரிபொருள் நெருக்கடி: புகையிரத சேவைகளைப் பாதிக்கும்


தற்போதைய எரிபொருள் நெருக்கடி தொடருமானால் புகையிரத சேவைகள் பாதிக்கப்படும் என புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


நாட்டில் நிலவும் தற்போதைய நெருக்கடி காரணமாக புகையிரத திணைக்களத்தின் திறன் நீடிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவரான சுமேத சோமரத்ன தெரிவித்தார்.


நிதி, போக்குவரத்து மற்றும் எரிபொருள் பிரச்சினைகளால் தற்போது அதிகளவான மக்கள் புகையிரதங்களை பயன்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.


அண்மைக் காலமாக புகையிரதங்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு குறைவான புகையிரத கட்டணங்களும் பங்களித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


எவ்வாறாயினும், கோரிக்கையை நிறைவேற்ற புகையிரத திணைக்களம் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறது.