பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


முன்னாள் அமைச்சர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதற்கான தீர்மானம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நாளை விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடவுள்ளார்.