ஒரே குடும்பத்தில் 2 வைத்தியர்கள்.!

 


மாஷா_அல்லாஹ்!

தற்போது ஒரே குடும்பத்தில் 2 வைத்தியர்கள், இன்னும் 2பேர் விரைவில் வைத்தியர்களாக வெளியாகவுள்ளனர்..

 

அம்பேபிட்டியைச் சேர்ந்த அல்ஹாஜ் பாரூக் மற்றும் பாஹிமா ஸஹீம் அவர்களது மகள் Dr.Farwin Farook  அவர்கள் இன்று கொழும்பு பல்கலை கழகத்தில் பட்டம் பெற்று தனது மருத்துவ படிப்பினை நிறைவு செய்துள்ளார். 


அல்ஹாஜ் பாருக் தம்பதிகள் தமது  நான்கு பிள்ளைகளையும்  மருத்துவர்களாக உருவாக்குவதற்கு அரும்பாடுபட்டுள்ளார்கள்.


மூத்த மகன் Dr.Anfas Farook அவர்கள் தற்போது களுபோவிலை போதனா வைத்திய சாலையில் பணியாற்றி வருகின்றார். 


மகள் Dr.Farwin Farook தற்போது பட்டம் பெற்று வெளியாகியுள்ளார்.


மூன்றாவது மகன் Althaf Farook கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் இறுதி ஆண்டு மருத்துவ படிப்பை முடித்து, பட்டமளிப்புக்காக காத்திருக்கிறார். 


நான்காவது மகன் Ajmal Farook கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் முதலாம் ஆண்டு மருத்துவ மாணவராக கல்வி கற்று வருகின்றார். 


அல்லாஹ் இக்குடும்பத்துக்கு இம்மையிலும் மறுமையிலும் ரஹ்மத் செய்வானாக🤲இந்த சமூகத்துக்கும் நாட்டுக்கும் மேலும் பல சேவைகளை செய்வதற்கு அதிகமான சந்தர்ப்பங்களை வழங்குவானாக🤲


தகவல்:

சகோதரர் ரிம்ஸான் ரபீக் 

அம்பேபிட்டிய.