20 ஆம் திகதி வாக்கெடுப்பு!

ஜனாதிபதி பதவி வெற்றிடமாக உள்ளதாக பாராளுமன்றத்தில் அதனை நாளை அறிவிக்க உள்ளதாக பாராளுமன்ற ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் இதற்கு முன்னர் தீர்மானித்தபடி புதிய ஜனாதிபதிக்கான வேட்புமனு கோரல் எதிர்வரும் 19 ஆம் திகதியும் ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு 20 ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

 

இந்நிலையில், சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று காலை ஆரம்பமானது.


இக்கூட்டத்தில் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயரை முன்மொழிவதற்கு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன