இ.போ.ச ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு தயார்


பணிக்கு வருவதற்கு எரிபொருள் வழங்கப்படாவிட்டால் இ.போ.ச ஊழியர்கள் பணியிலிருந்து விலகுவார்கள் என அகில இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சேபால லியனகே தெரிவித்துள்ளார்.அதன்படி இன்று காலை இ.போ.ச ஊழியர்களை கடமைக்கு அழைப்பதற்கு எரிபொருள் வழங்கும் முறையொன்றை அறிவிக்க அதிகாரிகள் மறுத்தால் இன்று நண்பகல் 12.00 மணிக்குப் பின்னர் சேவையில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்கள்.