ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிச்சயமாக வாக்குகளைப் பயன்படுத்தும்

ஜனாதிபதியை தெரிவு செய்வதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நிச்சயமாக வாக்குகளைப் பயன்படுத்தும் என கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். 


ஆனால் பாராளுமன்றத்தில் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்களை எடுப்பதற்குப் பதிலாக, ஒருமித்த கருத்தை எட்டுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 


கட்சி ஆதரவு தெரிவிப்பது தொடர்பில் இன்று (19) இடம்பெறவுள்ள கட்சியின் மத்திய குழுவில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தயாசிறி ஜயசேகர மேலும் தெரிவித்தார்.