ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க பொதுஜன பெரமுன எத்தகைய தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை.


புதிய ஜனாதிபதிக்கான தெரிவில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க பொதுஜன பெரமுன எத்தகைய தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை எனவும் நாளை 19ஆம் திகதியே அதுதொடர்பில் கலந்துரையாடி தீர்மானமொன்று எட்டப்படும் எனவும் முன்னாள் நீதியமைச்சர் அலிசப்ரி எம். பி தெரிவித்தார்.


தனிப்பட்ட கருத்துக்கள் இருக்கலாம் ஆனால் கட்சி என்ற வகையில் இதுவரை பொதுவான எந்த aதீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


 அது தொடர்பிலஅவர் மேலும் தெரிவிக்கையில்,


வேட்புமனு தாக்கல் செய்த பின்னரே அதுதொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்.எனினும் ஜனாதிபதி தெரிவில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்குவது என பொதுஜ பெரமுன இதுவரை எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை. நாளை 19ஆம் திகதியே அது தொடர்பில் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.


-லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்