வீட்டை அநியாயமாக எரித்தனர் இறைவன் நாட்டை நிர்வகிக்கின்ற பொறுப்பை ரணிலுக்கு வழங்கினான். - தே.கா.தலைவர் அதாவுல்லா

 

ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டை அநியாயமாக எரித்தார்கள், நாட்டை நிர்வகிக்கின்ற பொறுப்பை அவருக்கு இறைவன் வழங்கி உள்ளான். என்று தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ. எல். எம். அதாவுல்லா தெரிவித்தார்.


ஜனாதிபதியை பாராளுமன்றம் மூலமாக தெரிவு செய்கின்ற வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்தமை குறித்து (OBC News Tamil) ஊடகத்திற்கு அவர் தெரிவித்தமை வருமாறு....


அது அரசியல் செய்வதற்கான தருணமாக இருக்கவில்லை. அதனால் நான் அரசியல்வாதியாக அன்றி வாக்காளராகவே நடந்து கொண்டேன்.


தெளிந்த சிந்தனை உடைய எந்த வாக்காளரும் எடுக்க கூடிய தீர்மானத்தையே எடுத்து வாக்களித்தேன். அது மிக சரியான தீர்மானமாக அமைந்தது. தற்போதைய நெருக்கடி சூழலில் நாட்டை மீட்டு காப்பாற்ற ரணில் விக்கிரமசிங்கவால்தான்  முடியும்.


இது ரணில் விக்கிரமசிங்கவுக்கு கிடைத்துள்ள மிக உன்னதமான உயர்வு. இறைவனின் அருட்கொடை ஆகும். இப்படி ஒரு மகத்தான வாய்ப்பு அவருக்கு மீண்டும் கிடைக்குமா? என்பது தெரியாது. 


ஆகவே அவரும் இம்மகத்தான வாய்ப்பை திறம்பட  பயன்படுத்துவார் என்பது திண்ணம். அனுபவசாலிகளையும் திறமைசாலிகளையும் அரவணைத்து நடப்பார். ஆழிப் பேரலை அனர்த்தத்தை தொடர்ந்து அந்நாட்களில் எல்லோர் மத்தியிலும் நல்லிணக்கம் ஏற்பட்டது.  அது தற்போதைய தருணத்திலும் உணரப்பட்டுள்ளது.