நாடளாவிய ரீதியில் உள்ள பாமசிகள் மூடப்படும் அபாயம்

நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக பல்வேறு துறைகளும் கடுமையான பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ளன


இந்தநிலையில் மருந்தகங்களுக்கு மருந்துகளை விநியோகிக்கும் வாகனங்களுக்கான எரிபொருள் கிடைக்காத பட்சத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள மருந்தகங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது


தற்போது மருந்தகங்களில் ஒரு வாரத்திற்கு தேவையான மருந்துகளே காணப்படுவதாகவும் அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


எனவே மருந்தகங்களுக்கு மருந்துகளை விநியோகிக்கும் வாகனங்களுக்கான எரிபொருளை வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் எனவும் அந்த சங்கம் கோரியுள்ளது.