எரிபொருள் நெருக்கடி: கடிதங்களைப் பெறுவதில் தாமதம் ஏற்படக்கூடும்

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியால் கடிதங்களைப் பெறுவதில் தாமதம் ஏற்படக்கூடும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.


தற்போது நிலவும் நெருக்கடி நிலையால் தபால் நிலைய ஊழியர்கள் முறையாக கடமைக்கு சமுகமளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.