நாட்டில் உடனடியாக சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும்... ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேண்டுகோள்.


நாட்டில் முழுமையான சட்டம் ஒழுங்கை உடனடியாக நிலைநாட்டுமாறு பதில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு தரப்பினரை நாங்கள் கடுமையாகக் கேட்டுக்கொள்கின்றோம், அதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாகவும் வலியுறுத்துகிறோம். நாட்டில் வன்முறைக் குழுக்களின் நடத்தையை தீவிரமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதே எமது கருத்து.


சட்டம் ஒழுங்குக்கு மேல் எதுவும் இருக்க முடியாது. சட்டத்திற்கு மேல் யாரும் இருக்க முடியாது. ஏனென்றால், நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதன் மூலம்தான் குடிமக்களின் வாழ்வுரிமையும், வன்முறைக்கு ஆளாகாமல் இருப்பதற்கான சுதந்திரமும் கிடைக்கும். இந்த பொறுப்பை விட்டுவிட முடியாது என்பதையும், நிலையான சட்டம் மற்றும் அரசியலமைப்பு நிறுவன அமைப்பு மற்றும் தொடர்புடைய நிறுவன செயல்முறையின் முறையான செயல்பாட்டிற்கு எதிராக செயல்படவோ அல்லது தடுக்கவோ அனுமதிக்க முடியாது என்பதை நாங்கள் குறிப்பாக வலியுறுத்துகிறோம்.


சமீபத்தில், பல சந்தர்ப்பங்களில், வன்முறையாளர்கள் நாட்டில் ஒரு பயங்கரமான சூழ்நிலையை உருவாக்கினார்.


அவர்கள் ஏற்கனவே ஒரு பாராளுமன்ற மக்கள் பிரதிநிதி உட்பட பலரைக் கொன்றுள்ளனர் மற்றும் பல பொது மற்றும் தனியார் சொத்துக்களை அழித்துள்ளனர்.


இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் மீண்டும் இடம்பெறுவது எமது அவதானமாகும். எனவே, அனைத்து குடிமக்களின் பாதுகாப்பையும் வாழ்வதற்கான உரிமையையும் உறுதிப்படுத்த உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இறுதியாக, சட்டம் ஒழுங்கு எல்லாவற்றிற்கும் மேலாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.